إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

...எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. ..." (அல்குர்ஆன் 13:11)

அஸ்ஸலாமு அலைக்கும்

 

எந்த ஒர் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முதலில் தேவைபடுவது சரியான பயிற்சிதான்.

மாற்றத்தின் முதல் கட்டம் தனி மனித பயிற்சியே. அந்த பயிற்சியின் மூலம் ஒரு மனிதன் பெறும்; தெளிவும் புரிதலும் ஞானமும் ஒழுக்கமும்; அவன் வாழும் சமூகத்தில் பிரதிபலிக்கும். அது மட்டுமின்றி விவகாரங்களை நுணுக்கமாக ஆய்ந்து அணுகும் திறனும் இப்பயிற்சியினால் கிடைக்கப் பெறும். எனவே தனி மனித பயிற்சியே மாற்றத்திற்கான முதல் படி எனலாம்.

தனி மனித பயிற்சி என்றால் அதனை ஒட்டி எழும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை. அவையாவன:

    1. பயிற்சியை எங்கிருந்து பெறுவது? எவ்வாறு பெறுவது?

    2. பயிற்சிக்கான காலம் எவ்வளவு? படித்தரங்கள் என்னென்ன?

மேற்கண்ட வினாக்களுக்கு விடை தருவதுதான் இந்த இணையத்தளத்தின் நோக்கம்.

பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியில் செயல்முறையில் இந்த பயிற்சி நிருபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெற்ற அனுபவத்தைக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு சமர்பிப்பதற்காகவும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் பக்கம் பயிற்சி அளிக்கவும் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இந்த இணையத்தளம்.

பள்ளிவாசல் இமாம்களும் ஆசிரிய பெருமக்களும் பொது மக்களும் பெருந்தன்மையுடன் இந்த இணையத்தளத்தை அணுகவும், அதுமட்டுமின்றி தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி உதவும் படியும் வேண்டுகின்றோம்.

எண்ணங்கள் ஈடேற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!.

 

Latest Uploads